கட்டப்பட்ட 4 மாதங்களில் இடிந்து விழுந்த பள்ளி கூரை
கட்டப்பட்ட 4 மாதங்களில் இடிந்து விழுந்த பள்ளி கூரை
UPDATED : நவ 01, 2023 12:00 AM
ADDED : நவ 01, 2023 04:33 PM
அ நிறம் | அளவு
நாட்றம்பள்ளி:
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் கள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 38 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.பள்ளியில், 17.32 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டு, ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ஆயுத பூஜை விடுமுறைக்கு பின், நேற்று மாணவ - மாணவியர் வகுப்பறைக்கு சென்றபோது, சிமென்ட் கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்திருந்தது.அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல முற்பட்டனர். வகுப்பறையை சீரமைத்தால் மட்டுமே குழந்தைகளை வகுப்பறையில் அமர வைக்க அனுமதிப்போம் என, பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
