தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரகளை மாணவர்களை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை: ரயில்வே அதிரடி!

ரகளை மாணவர்களை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை: ரயில்வே அதிரடி!

ரகளை மாணவர்களை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை: ரயில்வே அதிரடி!


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 02, 2023 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 02, 2023 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னையில், ஓடும் ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வது, பட்டாக்கத்திகளை, நடைமேடையில் உரசியபடி செல்வது, பயணியரை அச்சுறுத்தும் வகையில் கத்திகளுடன் மோதிக் கொள்வது என, கல்லுாரி மாணவர்களின் அட்டகாசம், நாளுக்கு நாள் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது.இதை தடுக்க, கடந்த மாதம் ரயில்களில் மோதலில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள், 30 பேரை அடையாளம் கண்ட ரயில்வே போலீசார், அவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டுமெனக் கூறி, மாநில கல்லுாரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.சென்னையின் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கல்லுாரி மாணவர்கள், பெரும்பாலும் மின்சார ரயில்களில் வந்து செல்கின்றனர்.இதில், குறிப்பிட்ட சில கல்லுாரி மாணவர்களுக்கு இடையே, அடிக்கடி,ரூட் தல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் ஏற்படும் முன்விரோதம் காரணமாக, ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் இரு தரப்பாக ஆயுதங்கள் மற்றும் கற்களை வீசி மோதிக் கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால், கல்லுாரி மாணவர்களா அல்லது ரவுடிகளா என, பயணியர் பீதியில் உள்ளனர்.கடிதம்
கடந்தாண்டுகளில், வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை பிடித்து வைத்து, அவர்களின் பெற்றோரை வரவழைத்து, இனி இதுபோன்ற செயல்களில் எங்களது மகன் ஈடுபட மாட்டார் என எழுதி வாங்கிய பின், மாணவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.இதன் காரணமாக, வன்முறையில் ஈடுபடுவது குறைந்திருந்தது. சமீபமாக போலீசார் இவர்களை கண்டுகொள்ளாததால், மாணவர்களின் அட்டூழியம் மீண்டும் தலைதுாக்க துவங்கி உள்ளது. கடந்த மாதம், சென்னை கடற்கரை மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் மாணவர்கள் கத்தியால் வெட்டியும், கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.இந்த சம்பவத்தில் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. இதனால், ரூட் தல பிரச்னையில் மோதல் சம்பவம் நடைபெற காரணமாக இருந்த மாநில கல்லுாரியைச் சேர்ந்த 30 மாணவர்களை, கல்லுாரியில் இருந்து நிரந்தரமாக நீக்க, ரயில்வே போலீஸ் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.44 பேர் கைது
இதுகுறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கல்லுாரி மாணவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், சில மாணவர்கள் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது, வேதனை அளிக்கிறது.இதற்கிடையே, கடந்த மாதம் மின்சார ரயிலில், ரூட் தல பிரச்னையில் ஈடுபட்ட மாநில கல்லுாரியைச் சேர்ந்த 30 மாணவர்களை, கல்லுாரியில் இருந்து நிரந்தரமாக நீக்க பரிந்துரை செய்து, கல்லுாரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ரயில் நிலையங்களில் மோதலில் ஈடுபட்டு, 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் பெட்டிகளில் கூடுதல் போலீசாரை நியமனம் செய்து, கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சிக்கிய கொள்ளையன்
மின்சார ரயில்களில் பெண்களிடம் பணம், நகைகளை திருடிச் செல்லும் குற்றவாளிகளை பிடிக்க, ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி., வனிதா உத்தரவிட்டார். இதையடுத்து, டி.எஸ்.பி., ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.அதில் காவல் ஆய்வாளரும், பெண் போலீசும் சுடிதார் மற்றும் சேலை அணிந்து, கழுத்தில் கவரிங் செயினுடன் கடந்த 10 நாட்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலையில், ரயில்களில் பயணம் செய்வதுபோல ரோந்து வந்தனர்.அப்போது, கொள்ளையன் ஒருவர் ரயிலில் ஏறி, அந்த பெண் போலீசிடம் சென்று கத்தியைக் காட்டி நகையை பறிக்க முயற்சித்த போது, அவரை பெண் காவல் ஆய்வாளர் மடக்கிப் பிடித்தார்.இந்த ஆப்பரேஷனுக்கு, ரயில்வே பாதுகாப்பு படையினரும் உதவி செய்திருந்தனர்.இதையடுத்து கொள்ளையனிடம் விசாரித்த போது, அவரது பெயர் ஆனந்தன் என தெரிந்தது. துணிச்சலாக கொள்ளையனை மடக்கிப் பிடித்த பெண் போலீசாருக்கும், உதவிய ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே ஏ.டி.ஜி.பி., வனிதா பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதையடுத்து, அந்த கொள்ளையனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.மாணவர்கள் 25 பேர் சஸ்பெண்ட்
சென்னை மற்றும் புறநகர் மாவட்ட ரயில்கள் மற்றும் பேருந்துகளில், போலீசார் ரோந்து சென்று, அட்டகாசம் செய்யும் மாணவர்களை கண்காணித்து வருகின்றனர்.இதன்படி, சென்னை மாநில கல்லுாரியில் படிக்கும், 25 மாணவர்கள் தொடர்ந்து, ரயில்களில் கோஷ்டியாக சென்று, ரகளையில் ஈடுபடுவதை, ரயில்வே போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த மாணவர்களின் பெயர், பெற்றோர், முகவரி ஆகியவற்றை கண்டறிந்து, பட்டியல் தயாரித்துள்ளனர்.இந்த பட்டியல், ரயில்வே போலீசாரால் மாநில கல்லுாரிக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 25 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து, மாநில கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் திருந்தி, தங்களது எதிர்கால நலன் கருதி, ஒழுக்கமாக நடந்து கொள்ள முன்வந்தால், உரிய குழு அமைத்து ஆலோசித்து, இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே பேருந்து, ரயிலில் ரகளை செய்த விவகாரத்தில், மூன்று மாதங்களுக்கு முன், 15 மாணவர்கள் மாநில கல்லுாரியிலும், 10 மாணவர்கள் பச்சையப்பன் கல்லுாரியிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.பஸ்சில் அட்டூழியம்
ஊத்துக்கோட்டை - செங்குன்றம் செல்லும் தடம் எண்:
92 அரசு பேருந்தில், ஊத்துக்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10க்கும் மேற்பட்ட அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். இவர்கள் பேருந்தில் கூச்சலிட்டபடி வந்துள்ளனர். மேலும், பேருந்தில் உள்ள மின் ஒயர்களை அறுத்து, டியூப் லைட்டையும் உடைத்துள்ளனர்.இதை தட்டிக்கேட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனரை, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால், ஓட்டுனர் பேருந்தை ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு, போலீசாரிடம் நடந்தவற்றை கூறினார். இதனிடையே, மாணவ - மாணவியர் பேருந்தில் இருந்து இறங்கி ஓடி தப்பினர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்த மாணவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us