தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டமளிப்பு விழாவிற்கு வரமாட்டேன்: பொன்முடி

பட்டமளிப்பு விழாவிற்கு வரமாட்டேன்: பொன்முடி

பட்டமளிப்பு விழாவிற்கு வரமாட்டேன்: பொன்முடி


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 08:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 08:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, கவர்னர் மறுத்த விவகாரத்தில், அவருக்கு எதிராக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, போர்க்கொடி துாக்கி உள்ளார். கவர்னர் ரவியை புறக்கணிக்கும் நடவடிக்கையாக, மதுரையில் இன்று, அவர் தலைமையில் நடக்கும் காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு வர மாட்டேன் என்றும், அவர் அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:
மதுரையில் இன்று நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவை, இணை வேந்தர் என்ற முறையில் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறேன். ஏனெனில், இன்று நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில், சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என, பல்கலை சிண்டிகேட், செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பப்பட்டது.அதன்பின்னும், அவர் அதை நிராகரித்துள்ளார். சங்கரய்யா குறித்து கவர்னருக்கு தெரியாவிட்டால், அவர் குறித்து கேட்டிருக்க வேண்டும். சங்கரய்யா, 1922ம் ஆண்டு பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லுாரியில், இறுதியாண்டு படிக்கும்போது, படிப்பை நிறுத்தி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தார்.அதன்பின், சமூக நீதிக்காக, பொருளாதார சமத்துவத்திற்காக, பல முறை போராட்டங்களை சந்தித்து, நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அவருக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்க, கவர்னர் மறுத்த பின், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளனர். பல்கலை விதிகளின்படி, கவுரவ முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம், பல்கலை ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டு உள்ளது.ஆனால், எந்த சட்டத்தையும் கவர்னர் மதிப்பதில்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூக நீதி பேசுவோரை, கவர்னருக்கு பிடிப்பதில்லை. இதனால் சங்கரய்யாவுக்கு, கவுரவ முனைவர் பட்டம் கொடுக்கக் கூடாது என நினைக்கிறார். மறுப்பது ஏன் என்பதை, கவர்னரால் கூற முடியுமா?சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு, திராவிட அரசு மரியாதை கொடுக்கவில்லை என்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உதவுவது தான் திராவிட மாடல் ஆட்சி. அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என, நினைப்பவர் முதல்வர்.கவர்னர் இப்படி இருப்பது, வருந்தத்தக்கது. சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க, நான் வேண்டுகோள் விடுத்தேன். அதை அவர் செவிகளில் ஏற்கவில்லை. தமிழக வரலாற்றை புரிந்து கொள்ளாமல், சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுத்துள்ளார்.ஏனெனில், அவர் அந்த காலத்தில் இருந்தே, ஆர்.எஸ்.எஸ்.,சில் இருந்தவர். அவர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது மதிப்பு கிடையாது. அதனால் தான் அந்த வெறித்தனத்தோடு பேசுகிறார்.அவர் ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,க்கு ஆதரவாக செயல்படுகிறார்; பொய் கூறுவதை தொழிலாகக் கொண்டுள்ளார். கவர்னர் என்பவர் நியமிக்கப்பட்டவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை கூறுவதை செய்ய வேண்டும். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், கவர்னர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.இவரை விட மோசமான கவர்னர், இதுவரை இருந்ததில்லை. உண்மைக்கு புறம்பாக பல்வேறு செய்திகளை எடுத்துரைத்து, ஆட்சி மீது களங்கம் கற்பிக்கும் எண்ணத்துடன் செயல்படுகிறார். இதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க, கவர்னர் மறுத்திருப்பதால், பட்டமளிப்பு விழாவில், நான் பங்கேற்கவில்லை. திராவிட மாடல் என்றாலே, கவர்னருக்கு கசப்பாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திராவிடத்தை யாராலும் அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us