UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 10:40 AM
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை., அறிவியல் வளாகத்தில், மாணவர்களின் ஆராய்ச்சிகளை கவர்னர் ஆர்.என். ரவி பார்வையிட்டார்.காரைக்குடி அழகப்பாபல்கலை., யில் ஜி20 மாநாடு தலைமை பிரகடனம் மற்றும் அதிநவீன ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலை.,க்கு கவர்னர்ரவி வந்திருந்தார். நேற்று மாலை அழகப்பா பல்கலை., விருந்தினர் மாளிகைக்கு வந்தவரை அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க. ரவி வரவேற்றார்.தொடர்ந்து சிறப்புக்கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறையையும், அழகப்பா பல்கலை அறிவியல் வளாகத்தில் மாணவர்களால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து பல்கலை., ஆட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அழகப்பா பல்கலை., இணைவுக் கல்லுாரி முதல்வர்களை சந்தித்து பேசினார். இன்று காலை அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெறும் தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.
