துணை வேந்தர் நியமனம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு மனு
துணை வேந்தர் நியமனம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு மனு
UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 10:54 AM
அ நிறம் | அளவு
சென்னை:
பல்கலை.,களில் துணைவேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.மனுவில் கூறி இருப்பதாவது:
கோவை பாரதியார், சென்னை பல்கலைகழங்கள் உள்ளிட்ட பல்கலை.,யில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை, பல்கலைகழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார் எனவும், அரசு நியமித்த தேர்வுக்குழு பரிந்துரைப்படி நியமனம் செய்ய உத்தரவிடவேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார். எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக கவர்னருக்கு எதிராக சிவில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
