அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பு
UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 11:35 AM
இந்த தேர்வுகளை எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விபரம்:
நீட் தேர்வு பயிற்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனரகம் மேற்கொள்ளும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தனியாக வினாத்தாள் தயாரித்து தினசரி தேர்வுகள் நடத்தப்படும்.ஆன்லைன் வழியிலும் பாடங்கள் நடத்தப்படும். அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கும். ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்துக்கும் தலா நான்கு ஆசிரியர்கள் வீதம் மாநில அளவில் 20 ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவர். அனைத்து வேலை நாட்களிலும் மாலை 4:00 முதல் 5:30 மணி வரை பள்ளிகளிலேயே பாட வாரியாக வகுப்புகள் நடக்கும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
