தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செவ்வாய் கிரகத்தில் சாதிக்க ‘இஸ்ரோ’ திட்டம்

செவ்வாய் கிரகத்தில் சாதிக்க ‘இஸ்ரோ’ திட்டம்

செவ்வாய் கிரகத்தில் சாதிக்க ‘இஸ்ரோ’ திட்டம்


UPDATED : ஜன 28, 2010 12:00 AM

ADDED : ஜன 28, 2010 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2010 12:00 AM ADDED : ஜன 28, 2010 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: செவ்வாய் கிரக திட்டத்தில் சாதிப்பது குறித்து ‘இஸ்ரோ’ கவனம் செலுத்தி வருவதாக, அதன் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கர்நாடக மாநிலம் பெங்களூரில், ‘இஸ்ரோ’வின் கவுரவ ஆலோசகரும், மூத்த அதிகாரியுமான சிசிர் கே.தாஸ் என்பவர் எழுதிய, ‘மிஷன் மூன்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:


செவ்வாய் கிரகத்தில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவை, மனித வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் உள்ளது. வரும் 2030ம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்க, உலகளவிலான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய் கிரக திட்டத்தை வெற்றிகரமாக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். நம்மிடம் கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பம் உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்யும் இறுதி நிலையில், இஸ்ரோ உள்ளது.


அந்த இன்ஜினை பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களில், ஜி.எஸ்.எல்.வி., மார்க்-ஐஐ  ஏவப்பட உள்ளது. வரும் 2013ம் ஆண்டு, சந்திரயான்-2யை நிலவுக்கு அனுப்ப உள்ளது. அதில் இருக்கும் கருவிகள், நிலவின் மண்ணை ஆய்வு செய்து, அதுகுறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பும். அதைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு, விண்வெளிக்கு  மனிதரை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விண்வெளி வீரர்கள் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்று முதல் நான்காண்டுகளில், விண்வெளிக்கு மனிதரை அனுப்புவதற்கான தொழில் நுட்பத்தை, இஸ்ரோ உருவாக்கி விடும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us