தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய கல்விக்கொள்கையே இன்றைய சூழலுக்கு ஏற்றது: நமசிவாயம்

புதிய கல்விக்கொள்கையே இன்றைய சூழலுக்கு ஏற்றது: நமசிவாயம்

புதிய கல்விக்கொள்கையே இன்றைய சூழலுக்கு ஏற்றது: நமசிவாயம்


UPDATED : நவ 04, 2023 12:00 AM

ADDED : நவ 04, 2023 07:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2023 12:00 AM ADDED : நவ 04, 2023 07:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
இன்றைய சூழலுக்கு ஏற்றது புதியக் கல்விக் கொள்கை தான்; இதன் மூலம் வேலைக்கு தேவையான தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும் என மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) துவங்கிய ஞானோத்சவ் -2013 என்ற அறிவுத்திருவிழாவில் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமசிவாயம் தெரிவித்தார்.மரை எஸ்.எல்.சி.எஸ்., தமிழ்நாடு கல்வி மேம்பாட்டு கேந்திரம் (எஸ்.எஸ்.யு.என்.,) சார்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான இவ்விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் கல்லுாரி டீன் பிரியா வரவேற்றார். முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார்.புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம் பேசியதாவது: 
தற்போதுள்ள கல்வி முறை 40 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. நாம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குலக் கல்வி முறையில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளோம். நம் முன்னோர்கள் பண்பாடு, கலாசாரம் மாறாமல் வாழ்ந்தனர். அப்போது சிறப்பான மனித சமுதாயம் இருந்துஉள்ளது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கல்வி வாரியம் உள்ளது. இது சமூகத்திற்கு ஏற்ற கல்வியாக இல்லை.இன்றைய சூழலில் வாழ்வியல், பண்பாடு, உணவு முறை என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் சமுதாயத்திற்கான பொதுவான கல்வி முறை இல்லை. மாணவர்கள் படித்து விட்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் என அனைத்து துறைக்கும் தற்போது திறன் மேம்பாடு அவசியமாக உள்ளது. இதை தான் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இன்றைய சூழலுக்கு ஏற்றது இக்கல்வி முறையே.ஆனால் ஹிந்தியை படிக்க சொல்கிறார்கள் என அரசியலாக்குகின்றனர். மருத்துவம், பொறியியல் பாடங்களை தாய்மொழியில் படிக்கலாம். புதிய கல்விக் கொள்கையில் உள்ள கல்வித் தரம் காரணமாக புதுச்சேரியில் ஒரே நேரத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றப்பட்டன.இதன்மூலம் எந்த போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் தைரியம் மாணவர்களுக்கு கிடைக்கும். போட்டிகள் நிறைந்த சூழலில் அனைத்து துறைகளின் அறிவையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இலக்கை அடைவது சிரமம். அந்த வகையில் தான் புதிய கல்விக் கொள்கையை வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இதுபோன்ற ஞானோத்சவ் நிகழ்ச்சிகளால் கல்வியில் புரட்சி ஏற்படும் என்றார்.எஸ்.எஸ்.யு.என்., மாநில தலைவர் இந்திராணி, தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் வினோத், மாநில ஒருங்கிணைப்பாளர் கமல செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி சாதனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், ராஜன் பள்ளி மாணவர்களின் பஜனையும் நடந்தது. 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், பள்ளிகள் அமைத்துள்ள கல்வி கண்காட்சி அரங்குகளை அமைச்சர் நமசிவாயம் திறந்து வைத்து பார்வையிட்டார். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை அறிவியல் புலத் தலைவர் சேதுராமன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us