அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்
அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்
UPDATED : நவ 05, 2023 12:00 AM
ADDED : நவ 05, 2023 10:20 AM
கோவை:
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஸ்டெம் கண்டுபிடிப்புக்கான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகியவற்றில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகள் நடந்தன. இதில், 10, மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த, 54 மாணவர்கள் பங்கேற்றனர்.பார்வையற்றோர் நடந்து செல்லும்போதுஎதிரே வருவோர், வாகனங்கள் உள்ளிட்டவை குறித்து எச்சரிக்கையூட்டும் சென்சார் கருவி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் பள்ளிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இடம்பெற்றன.இதில், ஆர்.எஸ்., புரம், மாநகராட்சி எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் பள்ளி முதல் பரிசை தட்டியது. இரண்டாம் இடத்தை பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியும், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தது; மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆறுதல் பரிசும் பெற்றது.போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர், மாநகராட்சி மேயர் கல்பனா, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரை நேற்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் சந்தித்து, கண்டுபிடிப்புகளை காண்பித்து செயல் விளக்கம் அளித்தனர்.அப்போது, ஆராய்ச்சிகளில் அதிக பங்களிப்பை செலுத்துமாறு மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக, ஆறு மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.3.72 லட்சம் மதிப்பிலான புரொஜெக்டர்கள், திரைகள் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டன. கல்விக் குழு தலைவர் மாலதி, மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
