தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்

நீட் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்

நீட் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாரூர்:
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர் உதயநிதி பேசினார்.திருவாரூர் அருகேஆண்டிபந்தலில் நேற்று மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடந்தது.இதில் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக 22 பேர் இறந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியாக இருந்தது முதல் பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அதற்கான முழு முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட்டு வருகிறார்.சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஜனாதிபதி கையெழுத்துக்காக காத்திருக்கிறது. இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி சென்னை வந்தபோது அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் ரத்து என்பது தி. மு.க.வின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. மாணவர்களின் மருத்துவ கனவு
கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக நுழைவு தேர்வை கருணாநிதி ரத்து செய்தார். நீட் தேர்வுக்கான விலக்கு கேட்டும் ரத்து செய்ய கோரியும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதை மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறோம். எனவே நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us