அரசு பள்ளி கட்டட பணி: ஒப்பந்ததாரரை எச்சரித்த எம்.எல்.ஏ.
அரசு பள்ளி கட்டட பணி: ஒப்பந்ததாரரை எச்சரித்த எம்.எல்.ஏ.
UPDATED : நவ 05, 2023 12:00 AM
ADDED : நவ 05, 2023 05:23 PM
மயிலாடுதுறை:
திருக்கடையூர் அரசு பள்ளி வகுப்பறை கட்டட கட்டுமானம் பணியை தரமாக செய்ய வேண்டுமென தொகுதி எம்எல்ஏ ஒப்பந்ததாரரை எச்சரித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் மூலம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டட கட்டுமான பணியை, பூம்புகார் தொகுதிஎம்.எல்.ஏ.,வும் தி.மு.க., மா.செ.,வுமான நிவேதா எம். முருகன் பார்வையிட்டார்.அங்கு தரமற்ற மணல் கொட்டப்பட்டிருந்ததை கண்ட நிவேதா எம் முருகன் இந்த மணலை கொண்டு வகுப்பறை கட்டடத்தை கட்டினால் தரமாக இருக்குமா என கேள்வி எழுப்பியதுடன், அந்த மணலை பள்ளி விளையாட்டு திடலில் கொட்ட திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதுடன், ஒப்பந்ததாரரை தொலைபேசியில் அழைத்து தரமான பொருட்களைக் கொண்டு கட்டுமான பணியை செய்ய வேண்டும். எனக்கு எந்தவித கெட்ட பெயரும் ஏற்பட்டு விடக்கூடாது என எச்சரித்தார்.
