தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீதிபதி நெகிழ்ச்சி பேச்சால் கண் கலங்கிய மாணவர்கள்

நீதிபதி நெகிழ்ச்சி பேச்சால் கண் கலங்கிய மாணவர்கள்

நீதிபதி நெகிழ்ச்சி பேச்சால் கண் கலங்கிய மாணவர்கள்


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:
அந்தியூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நீதிபதியின் நெகிழ்ச்சியான பேச்சை கேட்டு, மாணவர்கள் கண்கலங்கி அழுதனர்.ஈரோடு மாவட்ட நீதித்துறை, நிர்வாகத்துறை, காவல்துறை இணைந்து, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்கேற்ற ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் பேசுகையில், மாணவர்களே உங்களுடைய ஹீரோக்கள் யார் தெரியுமா? உங்கள் அப்பாதான். அப்பா இல்லாத வீடுகளில் அம்மா ஹீரோ. அப்பாவை விட பெரிய ஹீரோ இந்த உலகத்திலேயே கிடையாது, என்றார். தொடர்ந்து மாணவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி தருவதாக கூறினார். அதன்படி, மாணவர்கள் அனைவரையும் கண்களை மூடிக் கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார்.நான் சொல்லும் வரை யாரும் கண்களை திறக்கக்கூடாது என்றவர், தொடர்ந்து பேசினார். அப்போது, உங்களுக்கு ஓட்டு வீடாவது இருக்கிறதா? அந்த வீடு ஒழுகாமல் உள்ளதா? நேற்றிரவு உங்கள் அப்பா என்ன சாப்பிட்டார்? அவர் சாப்பிட்டாரா; இல்லை சாப்பிடாமல் துாங்கினாரா? உங்கள் அப்பாவின் உள்ளங்கைகளை பார்த்திருக்கிறீர்களா?முதலாளி அவமானப்படுத்தினாலும் அந்த வலியை உங்களிடம் என்றாவது சொல்லியிருக்கிறாரா? தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் புதுத்துணி அணிந்திருக்கிறாரா? உங்கள் அப்பா உங்களுக்காக உடலை உருக்கியிருக்கிறாரா?, என்று நீதிபதி பேச்சை தொடர, ஒரு கட்டத்தில் மாணவ - மாணவியர் பலரும் கண் கலங்கி அழத்தொடங்கினர்.தொடர்ந்து, தன் பேச்சை முடித்த நீதிபதி, பெற்றோர் பெருமைப்படும் வகையில் படிக்க வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us