தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி கல்வித்துறை சார்பில், 2022-2023ம் கல்வியாண்டில் நடந்த கல்விச்சாரா மன்ற செயல்பாடுகள் போட்டியில், மாநில அளவில் தேர்வான மாணவர்கள் நவ., 3 முதல் 9 வரை, ஜப்பான் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர். 25 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் மற்றும் 2 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், வினாடி-வினா போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் நவ., 6 முதல் 11 வரை தென்கொரியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்வதற்காக, 25 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் மற்றும் 2 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தென்கொரியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லுவதற்காக, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி சுபிக்க்ஷா மற்றும் வீ.மேட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவி வித்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மேலும், ஜப்பான் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்வதற்காக, வெண்ணந்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு மாணவி பிரீத்தா, சின்னமுதலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி மற்றும் வெங்கரை அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவன் அபினேஷ் கண்ணன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சிங்கப்பூர் நாட்டிற்கு நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அனன்யா யாழினி மற்றும் மலேசியா நாட்டிற்கு, வேமன் காட்டுவலசு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் இளவரசன் ஆகியோர் கல்வி சுற்றுலா சென்று திரும்பினர். இம்மாணவர்களை, ராசிபுரம் அருகே நடந்த விழாவில் கலெக்டர் உமா பாராட்டி பரிசு, கேடயம் வழங்கினார். சி.இ.ஓ., மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us