UPDATED : நவ 06, 2023 12:00 AM
ADDED : நவ 06, 2023 07:11 PM
அ நிறம் | அளவு
சென்னை:
ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதி ஆதாரத்தை பொறுத்து நிறைவேற்றப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேட்டி:
ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன; சில கோரிக்கைகள் நிதி ஆதாரத்தை பொறுத்து நிறைவேற்றும் சூழ்நிலையில் உள்ளன. ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குழு பரிந்துரை அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
