தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீதிபதி பதவிக்கான தேர்வில் வினாத்தாள் மாறியதா?

நீதிபதி பதவிக்கான தேர்வில் வினாத்தாள் மாறியதா?

நீதிபதி பதவிக்கான தேர்வில் வினாத்தாள் மாறியதா?


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக நீதித்துறையின் கீழ் செயல்படும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில், சிவில் நீதிபதி பதவியில், 245 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியே, போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.இதில், முதல்நிலை தகுதி தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று முன்தினத்தில் இருந்து, இரு நாட்களாக பிரதான தேர்வு நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த தேர்வு நடந்தது.சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் மொழி பெயர்ப்பு தாள் மற்றும் சட்டப்பாடம், முதல் தாள் தேர்வுகள் நடந்தன. நேற்று காலை, சட்டப்பாடம் இரண்டாம் தாளுக்கும், பிற்பகலில் சட்டப்பாடம், மூன்றாம் தாளுக்கும் தேர்வு நடந்தது. இந்நிலையில், சில தேர்வு மையங்களில், நேற்று பிற்பகலுக்கான வினாத்தாள், காலையில் நடந்த தேர்வின் போது மாற்றி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.ஆனால், தேர்வில் எந்த குழப்பமும் இல்லை; சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்புடன், குளறுபடியின்றி தேர்வு நடத்தப்பட்டுள்ளது என, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us