தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடின உழைப்பு, விடா முயற்சி முன்னாள் கவர்னர் அறிவுரை

கடின உழைப்பு, விடா முயற்சி முன்னாள் கவர்னர் அறிவுரை

கடின உழைப்பு, விடா முயற்சி முன்னாள் கவர்னர் அறிவுரை


UPDATED : நவ 07, 2023 12:00 AM

ADDED : நவ 07, 2023 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2023 12:00 AM ADDED : நவ 07, 2023 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
முத்துார் ஸ்ரீ நவா கல்வியியல் கல்லுாரியின் பட்ட மளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி தாளாளர் சண்முகம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் தீபா, துணை முதல்வர் ராஜ்மோகன் ஆகியோர் வரவேற்றனர். செயலாளர் சக்தி வேல், செயல் இயக்குநர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி துணை முதல்வர் ராஜ்மோகன் வரவேற்றார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் கவர்னருமான சதாசிவம் பட்டங்களை வழங்கி பேசியதாவது:
கடம்ப நல்லுார் கிராமத்தில் பிறந்து ஆரம்ப பள்ளியில் தமிழ் வழியில் பள்ளி படிப்பை பயின்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உயர்ந்ததற்கு, அடிப்படை காரணம் கல்வி ஒன்று தான். பட்டம் பெற்று பெருமிதத்தோடு இருக்கும் நீங்கள் தான், இந்நாட்டு வரலாற்றை திருத்தி எழுத போகிறவர்கள். கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம். பட்டம் பெற்ற ஒவ்வொருவரும் ஒரு முறையாவது இந்திய அரசியலமைப்பு சாசனத்தை படித்திட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us