தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தாட்கோ மூலம் கடனுதவி

தாட்கோ மூலம் கடனுதவி

தாட்கோ மூலம் கடனுதவி


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு (தாட்கோ) கழகம் மூலம் கடனுதவி வழங்கப்படும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் கூறியுள்ளார்.சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது: 
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு (தாட்கோ) கழகம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் துவங்க ஏதுவாக மானியத்துடன் பில்டர் காபி நிலையம் அமைக்க கடனுதவி வழங்கப்படும்.இதற்கு காலி இடம் அல்லது கட்டடம் வைத்திருப்பது அவசியம். தொழில் முனைவோர் அல்லது அவர்களது ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணமாக ரூ.2 லட்சம் முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீத சிறப்பு தள்ளுபடி, பில்டர் காபி நிறுவனம் மூலம் அளிக்கப்படும் மாத பில்லிங் மென்பொருள் கட்டண விலக்கு தரப்படும். வயது 18 முதல் 40க்கு உட்பட்டோர் தாட்கோ மூலம் கடனுதவி பெற சான்றுடன், www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.6.50 முதல் 7.50 லட்சம் வரை திட்ட தொகை நிர்ணயித்து அதற்குரிய மானியமாக ஆதிதிராவிடருக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சமும், பழங்குடியினருக்கு 50 சதவீத அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 முதல் 10 சதவீதம் வரை சொந்த முதலீடு தொகையை வங்கியில் செலுத்தி, எஞ்சிய தொகையை வங்கி கடனுதவியாக பெறலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us