UPDATED : நவ 08, 2023 12:00 AM
ADDED : நவ 08, 2023 10:33 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரையில் தொடக்க கல்வித்துறை சார்பில் 2022 - 23ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளாக மதுரை எல்.கே.பி., நகர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (மதுரை கிழக்கு), டி.மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (அலங்காநல்லுார்), திருப்பரங்குன்றம் அயன்பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (திருமங்கலம்) ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளன.இப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு நவ.,14ல் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் அமைச்சர் மகேஷ் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் கேடயம் சான்றிதழ் வழங்கப்படும் என தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
