தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி திட்டப் பாடங்களை மேம்படுத்த முதல்வர் ஆலோசனை

சமச்சீர் கல்வி திட்டப் பாடங்களை மேம்படுத்த முதல்வர் ஆலோசனை

சமச்சீர் கல்வி திட்டப் பாடங்களை மேம்படுத்த முதல்வர் ஆலோசனை


UPDATED : ஜன 29, 2010 12:00 AM

ADDED : ஜன 29, 2010 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2010 12:00 AM ADDED : ஜன 29, 2010 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சமச்சீர் கல்வி முறையின் கீழ் தமிழகத்தில், வரும் கல்வியாண்டில் இருந்து முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள பாடநூல்கள் குறித்து, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டக் குழு துணைத் தலைவர் நாகநாதன், கனிமொழி எம்.பி., தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் நிதித்துறை, பள்ளிக் கல்வித் துறை செயலர், பாடநூல்கழகத் தலைவர், தமிழ்ப் பல்கலை துணைவேந்தர், அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட ஆலோசகர், பள்ளிக் கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், ஆசிரியர் கல்வி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


சமச்சீர் கல்வியில் பொதுப் பாடத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் தலைமையில் கடந்த நவம்பரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை குறித்த நேரத்தில் தரமாகவும், பொலிவாகவும் தயாரிக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டது.


அதன்படி, பாடநூல் தயாரிப்புக் குழுவினர் மூலம், முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பாடநூல்கள் குறித்து முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாடங்களை மேம்படுத்துவதற்குரிய ஆலோசனைகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us