தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழா: பொன்முடி புறக்கணிப்பு

திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழா: பொன்முடி புறக்கணிப்பு

திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழா: பொன்முடி புறக்கணிப்பு


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் பொன்முடி விழாவை புறக்கணித்தார்.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 14வது பட்டமளிப்பு விழா, சென்னையில் உள்ள பல்கலை வளாக கட்டடத்தில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தரும், கவர்னருமான ரவி பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். துணைவேந்தர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். இந்திய தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழக அமைச்சகத்தின் தலைவர் அசுதோஷ் சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.அவர் பேசியதாவது:
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நான் பணியாற்றியபோது, 4,500 கோடி ரூபாய் மதிப்பில் சூப்பர் கம்ப்யூட்டர் திட்டம், 3,660 கோடி ரூபாய் மதிப்பில், சைபர் இயற்பியல் அமைப்புக்கான தேசிய இயக்கம் ஆகியவை துவக்கப்பட்டன.இதில், செயற்கை நுண்ணறிவு, இயந்திர மொழி, தானியங்கி இயந்திரங்கள், ரோபோட்டிக்ஸ் என, 25 வகையான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சியும், கண்டுபிடிப்புகளும் நமக்கு தேவை. மத்திய அரசின் நிதி திட்டம், நிதி ஆயோக் ஆகியவற்றின் அடல் புத்தாக்க திட்டம், இளைஞர்களின் புத்தொழில் ஆர்வத்துக்கு, அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில், 9.776 பேருக்கு பட்டங்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது. 485 பேர் நேரில் பதக்கங்களை பெற்றனர். தமிழக உயர்கல்வி அமைச்சரும், பல்கலையின் இணை வேந்தருமான பொன்முடி, விழாவில் பங்கேற்பார் என, அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், நேற்றைய விழாவில், பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்தார்.அவருடன் சேர்த்து, உயர்கல்வி செயலர் கார்த்திக்கும் பங்கேற்கவில்லை. ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவிலும், கவர்னர் ரவி சிறப்புரையாற்றுவது வழக்கம்; நேற்றைய விழாவில் அவரும் சிறப்புரையாற்றவில்லை.ஏற்கனவே, மதுரை காமராஜ் பல்கலையில் நவ., 2ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணிப்பதாக அறிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க, கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், இந்த முடிவு எடுக்கப்படுவதாக அறிவித்தார்.இந்நிலையில், தமிழக திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவிலும், பொன்முடி பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். ஆனால், இதற்கான காரணத்தை அவரோ, பல்கலை நிர்வாகமோ அறிவிக்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us