தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடங்காத பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் சாகச பயணம்

அடங்காத பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் சாகச பயணம்

அடங்காத பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் சாகச பயணம்


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி சாலையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளிக்கு என்.என்.கண்டிகை, நெமிலி, தாழவேடு, வேலஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், அரசு பேருந்துகள் வாயிலாக திருத்தணிக்கு வந்து, அங்கிருந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.இதேபோல் அருங்குளம், கே.ஜி.கண்டிகை, கோரமங்கலம், அகூர், சூர்யநகரம், பாபிரெட்டிப் பள்ளி பகுதிகளில் இருந்தும், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்து வாயிலாக திருத்தணிக்கு வருகின்றனர்.அப்போது, அரசு பேருந்தில் இவர்கள், படிக்கட்டுகள் மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கியவாறும், பேருந்து கூரையில் அமர்ந்தும், சாகச பயணம் செய்கின்றனர். போலீசார் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் பலமுறை கண்டித்தும், தொடர்ந்து இந்த சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே, பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கி, மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை தடுத்து நிறுத்த, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us