தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் நகரில் 20 நாட்களாக தொடரும் துயரம் மருத்துவமனை, பள்ளியில் பாதிப்பு

தினமலர் நகரில் 20 நாட்களாக தொடரும் துயரம் மருத்துவமனை, பள்ளியில் பாதிப்பு

தினமலர் நகரில் 20 நாட்களாக தொடரும் துயரம் மருத்துவமனை, பள்ளியில் பாதிப்பு


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நகராட்சி தினமலர் நகரில் பாதாள சாக்கடை நீர் பம்பிங் நிலையம் செயலிழந்ததால் 20 நாட்களாக கழிவு நீர் ரோட்டில் ஆறாக ஓடுகிறது. இங்குள்ள மருத்துவமனை மற்றும் துவக்கப் பள்ளி அருகே 20 நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள், குடியிருப்போர், நோயாளிகள் பீதியில் உள்ளனர்.கடந்த 20 நாட்களாக தினமலர் நகர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரயில்வே பீடர் ரோடு, சிவன்கோவில் வடக்கு தெரு ஆகிய இடங்களில் கழிவுநீர் ரோட்டில் ஆறாக ஓடுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் பெயரளவில் கழிவுநீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.எடுத்த அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மீண்டும் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.குறிப்பாக தினமலர் நகரில் பயோனியர் மருத்துவமனை, அருகிலும், இங்குள்ள புனித அந்திரேயா துவக்கப்பள்ளி அருகிலும்ரோட்டில் கழிவுநீர் ஓடுகிறது.துவக்கப்பள்ளி வளாகம்வாசலில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்கள்நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளி உள்ளே வாகனம் மூலம் சென்றுமாணவர்களை ஏற்றி, இறக்கிச் செல்கின்றனர்.கழிவுநீரால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும், துர்நாற்றத்தால் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் அச்சத்தில் மக்கள் உள்ளனர். இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் புகார் அளித்தும் எதுவும் நடக்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us