தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சங்கர நேத்ராலயா அகாடமி துவக்கம்

சங்கர நேத்ராலயா அகாடமி துவக்கம்

சங்கர நேத்ராலயா அகாடமி துவக்கம்


UPDATED : ஜன 29, 2010 12:00 AM

ADDED : ஜன 29, 2010 12:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2010 12:00 AM ADDED : ஜன 29, 2010 12:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை வரும் ஏப்ரல் முதல் சங்கர நேத்ராலயா அகாடமியை துவக்க உள்ளது.


இதன்மூலமாக கண் மருத்துவம், கண்ணியல், செவிலியர் பயிற்சி மற்றும் நிர்வாகம் குறித்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்க உள்ளது. ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர், ஆர்த்தாப்டிக்ஸ், கான்டாக்ட் லென்ஸ், மருத்துவமனை நிர்வாகம் போன்ற பிரிவுகளில் சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


விஷன் தெரபி, பெலோஷிப் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சிகள் துவக்கத்தில், சென்னை கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயாவின் தலைமை மருத்துவமனையில்  5 வாரம் முதல் ஓர் ஆண்டு பயிற்சிகளாக வழங்கப்படுகிறது. பாடநூல் மற்றும் செயல்முறை பயிற்சிகளோடு சங்கரா நேத்ராலயாவின் அனுபவமிக்க கண் மருத்துவர்கள் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வரக்கூடிய பேராசியர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளன. மேலும்,  ஆன்லைன் முறையிலும் இப்படிப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us