பாரதிதாசன் மகளிர் அரசு கல்லுாரியில் திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்
பாரதிதாசன் மகளிர் அரசு கல்லுாரியில் திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்
UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 09:38 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் அரசு கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடந்தது.வணிகவியல் துறை தலைவர் சிவகுமார் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் குப்பைகளை தரம் பிரிப்பது,கழிவுகளை குறைப்பது, பயன்படுத்திய பொருட்களை மறுசுழற்சி செய்தல் குறித்து விளக்கப்பட்டது.புதுச்சேரி நகராட்சி காயத்ரி ஸ்ரீகாந்த் கல்லுாரி மாணவிகளுடன் கலந்துரையாடி, திட கழிவு மேலாண்மை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். துாக்கி எறியும் பொருட்களை கொண்டு மதிப்பு கூட்டல் பொருட்களை செய்வது குறித்து ஜாலி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் புரூனோ சாவியோ பேசினார். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள், மாணவிகள் செய்திருந்தனர்.
