UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 12:20 PM
ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு பதிவு செய்யும் மாணவர்களில், 50,000 பேர் வரை தேர்வில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகின்றனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ஆப்சென்ட் ஆகியுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர், 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 1 ஆகியவற்றில், பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் ஆனவர்கள் என, தெரியவந்தது.இதையடுத்து, இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பல இடங்களில் கல்வி ஆண்டு துவங்கி, ஐந்து மாதங்கள் கடந்ததால், மாணவர் சேர்க்கையில் தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில், மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கும் குழுவுடன் இணைந்து, இடைநிற்றல் மாணவர்களின் விபரங்களை கண்டறிந்து, அவர்களை இந்த மாதத்திற்குள் பள்ளிகளில் சேர்த்து, பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
