தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுமைப்பெண் திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம்: எம்.பி.,

புதுமைப்பெண் திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம்: எம்.பி.,

புதுமைப்பெண் திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம்: எம்.பி.,


UPDATED : நவ 10, 2023 12:00 AM

ADDED : நவ 10, 2023 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2023 12:00 AM ADDED : நவ 10, 2023 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
புதுமைப்பெண் திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவியர் அதிகம் பயன்பெற்று, தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது என எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.நாமக்கல், புதுச்சத்திரம் ஒன்றியம், கரடிப்பட்டியில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், 462 பேருக்கு, 61.33 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவியருக்கு, மாதம், 1,000 ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், அதிகபட்சமான மாணவியர், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்று, தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. கரடிப்பட்டியில் நடக்கும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 462 பயனாளிகளுக்கு, 61.33 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் நலன் திட்டங்களை நிறைவேற்றி வரும் அரசிற்கு, தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, பல்வேறு துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கை, எம்.பி., பார்வையிட்டார். மாவட்ட பஞ்., துணைத்தலைவர் செந்தில்குமார், பஞ்., தலைவர் நாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், ஆர்.டி.ஓ., சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us