தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓய்வு பெறும் 51 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

ஓய்வு பெறும் 51 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

ஓய்வு பெறும் 51 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்


UPDATED : நவ 11, 2023 12:00 AM

ADDED : நவ 11, 2023 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2023 12:00 AM ADDED : நவ 11, 2023 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்டத்தில், தொடக்க கல்வித்துறையில் மட்டும் 51 ஆசிரியர்கள் இக்கல்வியாண்டுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. டெட் தேர்வு முடித்த பட்டதாரிகளை பணியில் அமர்த்துமாறு, தொடர்ந்து போராட்டங்கள் நடக்கின்றன. நியமனத்தேர்வு ரத்து செய்யாமல், பட்ட தாரிகளைகாலிப் பணியிடங்களில் நியமிக்காமல், ஆளும்கட்சி இழுத்தடிப்பதால், அதிருப்தி எழுந்துள்ளது.இந்நிலையில், தொடக்க கல்வித்துறையில் மட்டும், நடப்பு கல்வியாண்டுடன் பணி ஓய்வு பெறுவோர் விபரங்கள், பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை எனும் எமிஸ் இணையதளத்தில் இருந்து, திரட்டும் பணிகள் நடக்கின்றன.இதன்படி, கோவை கல்வி மாவட்டத்தில் 27 பேர், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 24 பேர், இக்கல்வியாண்டுடன் பணி ஓய்வு பெறவுள்ளனர். மாநிலம் முழுக்க, ஆயிரத்து 892 பேர் பணி ஓய்வு பெறுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. பணி ஓய்வு இடங்களில் தற்காலிக ஆசிரியர்களே தொடர்ந்து நியமிப்பதால், ஆரம்ப வகுப்பு மாணவர்களின், கல்வித்தரம் பின்தங்கும் அபாயம் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மூன்றில் ஒரு பங்கு காலியிடங்கள், பணி ஓய்வு பெறுவோர் விபரங்களை வெளியிடுவதே வழக்கம். இதுதவிர, பணி அழுத்தம் காரணமாக, பலர் விருப்ப ஓய்வு பெற திட்டமிட்டுள்ளனர்.தொடக்க வகுப்புகளில் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், போதிய ஆசிரியர்கள் நியமிக்காமல் இழுத்தடிப்பதால், கடும் பணிச்சுமை ஏற்படுகிறது. விரைவில் நிரந்தர ஆசிரியர்கள் நியமித்தால் மட்டுமே, தொடக்க கல்வித்தரம் உயரும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us