தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜப்பான் சுற்றுலா சென்று வந்த பள்ளி மாணவிக்கு வரவேற்பு

ஜப்பான் சுற்றுலா சென்று வந்த பள்ளி மாணவிக்கு வரவேற்பு

ஜப்பான் சுற்றுலா சென்று வந்த பள்ளி மாணவிக்கு வரவேற்பு


UPDATED : நவ 11, 2023 12:00 AM

ADDED : நவ 11, 2023 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2023 12:00 AM ADDED : நவ 11, 2023 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்:
குறும்பட போட்டியில் மாநில அளவில் தேர்வாகி ஜப்பான் சுற்றுலா சென்று வந்த திருக்கோவிலுார் அரசு மாதிரி பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூரைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழலாளி. இவரது மகள் நிஷானிகா, 15; ஜி.ஆரியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடந்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்றார்.தொடர்ந்து மாநில அளவில் சென்னையில் நடந்த போட்டியில் மல்லி என்ற குறும்படத்தை தயாரித்து முதலிடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 3ம் தேதி நிஷானிகா ஜப்பானிற்கு கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பியவருக்கு நேற்று ஜி.அரியூர் கிராம மக்கள் மற்றும் பள்ளியின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஊராட்சி தலைவர் ஏழுமலை, தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாண்டியன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பரிமளா மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, மேளதாளம் முழங்க மாணவியை பள்ளிக்கு அழைத்துச் சென்று பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us