தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் முதன்முறையாக ஓவியக்கூடம்

அரசு பள்ளியில் முதன்முறையாக ஓவியக்கூடம்

அரசு பள்ளியில் முதன்முறையாக ஓவியக்கூடம்


UPDATED : நவ 12, 2023 12:00 AM

ADDED : நவ 12, 2023 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2023 12:00 AM ADDED : நவ 12, 2023 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் ஓவியப்படைப்புகளைக் காட்சிப்படுத்த, தனியாக ஓவியக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, விளையாட்டு, தனித்திறன்களில் ஜொலிக்கும் மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.அவ்வகையில், ஓவிய ஆசிரியர் தியாகராஜன், தனது சொந்த செலவில், ஓவியக்கூடம் ஒன்றை அமைத்துள்ளார். அதில், மாணவர்களின் ஓவியப்படைப்புகள், ஒரு வார காலத்திற்கு, கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.முன்னதாக, இந்த கண்காட்சி, தலைமையாசிரியர் ரா.பழனிசாமி தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா துவக்கி வைத்தார். இதில், பென்சில் ஓவியம், பல்வேறு வண்ணங்கள் வாயிலாக வரையப்பட்ட இயற்கை காட்சிகள், கார்ட்டூன் படங்கள், மலர்கள், பழங்கள், உயிரினங்கள் என, 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.தேவையற்ற பொருட்களின் வாயிலாக வடிவமைக்கப்பட்ட, சிறு வகையிலான கைவினைப்பொருட்கள், புதிய சிந்தனையைத்துாண்டும் விதத்தில் அமைந்துள்ளது. மாணவ, மாணவியரின் கற்பனைத்திறனையும், படைப்பாற்றல் மற்றும் ஓவியத்திறனையும் வெளிக்கொணரும் விதமாக இப்பள்ளியில் பயிற்சி அளிப்பதை பலரும் வாழ்த்தினர்.இப்பள்ளியில் பயிலும் பிற மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஓவியக்கண்காட்சியை கண்டு களித்து மகிழ்கின்றனர். பள்ளிக்கல்வி ஆய்வாளர்கள் ரவி, கலைமணி, தலைமையாசிரியர்கள் மாரியப்பன், பழனிசாமி, உதவி தலைமையாசிரியர்கள் ஜோதிமணி, சக்திவேல்ராஜா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us