தீபாவாளி எஸ் ஏ யில் கலக்கிய சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்
தீபாவாளி எஸ் ஏ யில் கலக்கிய சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்
UPDATED : நவ 12, 2023 12:00 AM
ADDED : நவ 12, 2023 05:02 PM
சான் ஆண்டோனியோ: தீபாவளியை தித்திக்கும் தீபாவளி, வண்ண வண்ண ஆடைகளின் தீபாவளி, வாண வேடிக்கைகளின் தீபாவளி என எவ்வாறெல்லாம் வருணித்துக் கொண்டாடுகிறோமோ அதே அளவு நம் உறவுகளின் சங்கமத்தையும் மனம் விரும்பி கொண்டாட நினைக்கின்றோம். நம்மில் பெரும்பான்மையோரின் குடும்பமும்,உறவுகளும் இந்தியாவில் இருக்க, இங்கே நட்பே உறவுகளாக மாறி மகிழ சான் ஆண்டோனியோவில் மட்டுமே நிறைய தீபாவளிக்கு உண்டு!நம் சங்கத்தின் தீபாவளி கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஓர் கொண்டாட்டம் மிக விரைவில் வரவிருக்க, சமீபத்தில் தீவாளி எஸ் ஏ எனும் இந்தியாவின் நகரங்கள்,கிராமங்கள் என மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் இங்கு வந்து வாழவந்த அனைவரும் மட்டுமல்லாது, அமெரிக்கர்கள், மெக்சிகர்கள் என பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த தீவாளியில் நம் சங்கம் மிகச் சிறப்பு நிகழ்ச்சிகள் சில அளித்து, பார்த்த அத்தனை பேர்களையும் அசரச் செய்தது என்றே சொல்ல வேண்டும்!பார்ஜ்-அலங்கரிக்கப்பட்ட படகில் இந்தியாவின் முதுகெலும்பென போற்றப்படும் நெசவுத் தொழிலை மையமாகக் கொண்டு தறியை இந்தியாவில் இருந்து வரவழைத்து அலங்கரிக்கப்பட்டு, இங்கு சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள்,சங்கத்தின் தன்னார்வலர்கள் என பலரின் உதவியினால் படகில் நிறுத்தியபடி, அழகாய் ஆடிப்பாடியும் நகர்ந்து சென்றது அனைவராலும் போற்றப்பட்டது.
