தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொலு பாரம்பரியம் பற்றி சொல்லி கொடுக்கும் தமிழ் பெண் ரோஷினி

கொலு பாரம்பரியம் பற்றி சொல்லி கொடுக்கும் தமிழ் பெண் ரோஷினி

கொலு பாரம்பரியம் பற்றி சொல்லி கொடுக்கும் தமிழ் பெண் ரோஷினி


UPDATED : நவ 13, 2023 12:00 AM

ADDED : நவ 13, 2023 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2023 12:00 AM ADDED : நவ 13, 2023 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் சார்பில் சமீபத்தில், நவராத்திரி கொலு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றவர் ரோஷினி பாண்டியன். இவரது பெற்றோர், தமிழகம் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் என்ற ஊரை பூர்விகமாக கொண்டவர்கள். பெங்களூரு ராமசந்திரபுரத்தில் வசித்து வரும் அவர், தீபாவளியை ஒட்டி நமது நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.முதன் முதலில் கொலு வைத்ததன் நோக்கம்?எனது அப்பா பாண்டியனுக்கு காலில் அடிபட்டு இருந்தது. அவருக்கு குணமாக வேண்டும் என்று வேண்டி கொண்டு, களிமண்ணில் முதன்முதலாக விநாயகர் சிலை செய்தேன். அந்த சிலை அழகாக வந்திருந்தது. எனவே களிமண்ணில் பல்வேறு சிலைகளை செய்து, கொலு வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளாக கொலு வைக்கிறோம்.101 பொம்மைகள்
கொலுவில் எத்தனை பொம்மை இடம் பெற்றது?ஒன்பது அடுக்குகளில், 101 பொம்மைகள் வைத்திருந்தோம். நாங்கள் கொலுவில் வைக்கும் பொம்மைகள், அனைத்தும் களிமண்ணில் செய்தவை. பொம்மைகள் செய்ததும் அதன் மீது வர்ணம் பூசி, உடை, அலங்காரம் செய்வேன்.கொலு வைக்கயார் உதவி செய்வர்?எனது அம்மா உதவியாக இருப்பார். கணவர் விவேக், கொலு வைக்கும்படி ஊக்குவிப்பார். கொலு பொம்மைகளை எடுத்து வைக்க, டியூஷன் மாணவர்களும் உதவுவர்.கொலுவுக்கு பக்கத்து வீட்டினருக்கு அழைப்பு உண்டா?நிச்சயமாக, எங்கள் வீட்டில் பத்து நாட்கள் கொலு வைப்போம். தினமும் 30 பேர் பங்கேற்பர். மாலை 5:30 மணியில் இருந்து இரவு 11:00 மணி வரை, கொலுவை பார்க்க வருவர். வீட்டிற்கு வருவோருக்கு சுண்டல், பருப்பு சாதம், சர்க்கரை பொங்கல் செய்து பிரசாதமாக வழங்குவோம்.பக்கத்து வீட்டினரும் அவர்கள் வீட்டில் செய்ததை, எங்கள் வீட்டிற்கு எடுத்து வருவர்.இரட்டை குழந்தை
கொலு பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட நன்மை?ஆமாம். ஒரு தம்பதிக்கு திருமணம் முடிந்து, ஆறு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தனர்.கடந்த ஆண்டு, எங்கள் வீட்டில் நடந்த கொலுவில் பங்கேற்றனர். அதன்பின்னர் அவர்களுக்கு, இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது அவர்களும் வீட்டில் கொலு வைத்து வழிபடுகின்றனர்.டியூஷன் மாணவர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?அவர்களுக்கும் சொல்லி கொடுக்கிறேன். இன்றைய நவீன காலக்கட்டத்தில், மாணவர்கள் மொபைல் போனில் மூழ்கி விடுகின்றனர். எங்கள் வீட்டில் கொலு வைக்கும் போது, மாணவர்களை கொலு முன்பு அமர வைத்து, கொலு வைப்பதன் நோக்கம்; நமது பராம்பரியம் பற்றி சொல்லி தருகிறேன். அவர்களும் ஆர்வமாக கேட்கின்றனர்.ஒன்பதாவது நாள் கொண்டாட்டத்தின் போது, மாணவர்களுக்கு பரதநாட்டியம் சொல்லி கொடுக்கிறேன். எனது வீட்டிற்கு கொலு பார்க்க வருவோர், ஒன்பது சிறுமிகளுக்கு பாத பூஜை செய்வர்.கொலுவில் வைக்க வேண்டிய பொம்மைகள்?துர்கா, லட்சுமி, சரஸ்வதி, முனீஸ்வரர், மரபாச்சி எனும் ராஜா, ராணி பொம்மைகள்.இடம்பெற கூடாதபொம்மைகள்?காட்டேரி, நாகர்கல், இந்திரன் பொம்மைகளை வைக்கவே கூடாது.கொலு பொம்மைகள் விற்பனை செய்வீர்களா?அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.தினமலர் பரிசு பெற்ற தருணம் எப்படி இருந்தது?ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆண்டுதோறும் கொலுப் போட்டிகளை நடத்தி, அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல், பெரிய பரிசு பெற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டுள்ளது. கொலு போட்டிகளை தவிர வேறு சில போட்டிகளையும், &'தினமலர்&' நடத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.மெஹந்தியில் அசத்தல்
கொலு வைப்பதில் மட்டும் இல்லை. ஓவியம் வரைவதிலும், மெஹந்தி போடுவதிலும் ரோஷினி கைதேர்ந்தவராக உள்ளார். பல ஓவியங்களை வரைந்து வீட்டில் பிரேம் செய்து வைத்து உள்ளார். இதுதவிர சுபநிகழ்ச்சிகளுக்கு பெண்கள் கைகளில், மெஹந்தி போடும் தொழிலும் செய்கிறார்.டிசைன்களை பொறுத்து, பணம் வாங்குகிறார். மெஹந்தி தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை supreme - welbeing என்ற, இன்ஸ்டாகிராம் கணக்கில் பார்க்கலாம். இவரை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பர்: 85535 08682மாணவர்களுக்கு டியூஷன்
ரோஷினி கூறுகையில், எனது தந்தை பாண்டியன், தாய் ஜமுனா ராணி. தமிழகத்தின் சோளிங்கரை, பூர்வீகமாக கொண்டவர்கள். எனது கணவர் விவேக். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நான் பிறந்தது, படித்தது எல்லாம் பெங்களூரில் தான். தமிழ் நன்றாக பேசுவேன்; படிக்கவும் கற்று வருகிறேன். எம்.காம்., படித்து உள்ளேன். ஒன்று முதல் பத்து வகுப்பு வரை, மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறேன் என்றார்.- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us