UPDATED : நவ 13, 2023 12:00 AM
ADDED : நவ 13, 2023 11:02 AM
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் வேம்பு, புளி, நாவல், மா, கொடிக்கா உட்பட பல வகைகளைக் கொண்ட 20 ஆயிரம் விதைப் பந்துகள் தயார் செய்யப்பட்டன.என்.எஸ்.எஸ்., மாவட்ட திட்ட அலுவலர் நேருராஜன், ஊராட்சி தலைவர் சந்திரா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தன் வழிகாட்டுதலில் தயார் செய்யப்பட்ட விதைப் பந்துகளை மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் தூவினர். நிகழ்ச்சியில் கடமலைக்குண்டு எஸ்.எஸ்.ஐ., பால்பாண்டி, தலைமை ஆசிரியர் அழகு சிங்கம், ஆசிரியர் செல்வம், என்.எஸ்.எஸ்., கண்டமனுார் திட்ட அலுவலர் முத்து உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் மகேந்திரன் செய்திருந்தார்.போடி: தீபாவளியை முன்னிட்டு, போடி அருகே சில்லமரத்துப்பட்டி ஊராட்சி மந்தை குளத்தை சுற்றி பனை விதைகள் நடும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் வனிதா தலைமை வகித்தார். பசுமை பங்காளர் அமைப்பு நிறுவனர் பனை முருகன் முன்னிலையில் சில்லமரத்துப்பட்டி இளைஞர்கள் ஒன்று கூடி மந்தை குளத்தை சுற்றி 50 க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனர்.
