தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமை ஆசிரியைகளிடம் ஊதிய உயர்வு தொகை வசூலிக்க தடை

தலைமை ஆசிரியைகளிடம் ஊதிய உயர்வு தொகை வசூலிக்க தடை

தலைமை ஆசிரியைகளிடம் ஊதிய உயர்வு தொகை வசூலிக்க தடை


UPDATED : நவ 13, 2023 12:00 AM

ADDED : நவ 13, 2023 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2023 12:00 AM ADDED : நவ 13, 2023 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியைகளிடம் இருந்து, ஊதிய உயர்வு தொகையை வசூலிக்க, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை நாடியம்மாள் தாக்கல் செய்த மனு:
புலிவலம் நகராட்சி தொடக்கப் பள்ளியில், 1988ல் இளநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின், 1997ல் எம்.ஏ., 2009ல் பி.எட்., 2015ல் பி.லிட்., படிப்புகளை முடித்தேன். இருப்பினும், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.தமிழக அரசு, 2007 ஏப்ரல், 30ல் பிறப்பித்த அரசாணையின்படி, ஊதிய உயர்வு பெற தகுதியுள்ளது. எனவே, கோரிக்கை மனுவை பரிசீலித்து, 2011 ஜூலை 28 முதல், எனக்கு இரட்டை ஊதிய உயர்வு வழங்கி, 2012 ஜூன் 27ல், திருவாரூர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.பின், தணிக்கை அதிகாரி அறிக்கையின்படி, எனக்கு வழங்கிய ஊதிய உயர்வை நிறுத்தும்படி, திருவாரூர் வட்டார கல்வி அதிகாரி, 2021 டிச., 24ல் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தேன். மனுவை பரிசீலித்த கல்வி அதிகாரி, இரண்டு ஊதிய உயர்வை நிறுத்தியதோடு, இதுவரை பெற்ற ஊதிய உயர்வு தொகையையும் வசூக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, அதற்கு தடை விதிக்கவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியைகள் ஆர்.அருணா, கே.பிச்சையம்மாள் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் ஆர்.முருகபாரதி ஆஜரானார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், மூன்று தலைமை ஆசிரியைகளிடம் இருந்து, ஊதிய உயர்வு தொகையை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us