தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிகர்நிலை பல்கலை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

நிகர்நிலை பல்கலை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

நிகர்நிலை பல்கலை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


UPDATED : ஜன 30, 2010 12:00 AM

ADDED : ஜன 30, 2010 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2010 12:00 AM ADDED : ஜன 30, 2010 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில், 44 பல்கலைக் கழகங்களின் அந்தஸ்தை ரத்து செய்யலாம்’ என, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் தற்போதைய நிலை தொடர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.


இந்நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க, மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சிர்புர்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனு தொடர்பாக மத்திய அரசுக்கும், பல்கலைக் கழக மானியக் குழுவிற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us