UPDATED : நவ 15, 2023 12:00 AM
ADDED : நவ 15, 2023 10:17 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை புத்தகத்திருவிழாவில் மாவட்ட மைய நுாலகத்திற்கு பதிப்பாளர்கள், வாசகர்கள் இலவசமாக நுால்கள் வழங்கினர். அதில் சிலவற்றை நுாலக ஊழியர்கள் எடைக்கு போட்டதாக தகவல் வெளியானது.இதுதொடர்பாக மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி தெரிவித்துள்ளதாவது:
நன்கொடையாக பெறப்பட்ட நுால்கள் எடைக்கு போடப்படவில்லை. புத்தகத் திருவிழாவில் நன்கொடையாக பெறப்பட்ட 271 நுால்கள் கலெக்டர் சங்கீதா அறிவுறுத்தல்படி முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) கார்த்திகாவிடம் அக்.,26ல் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
