UPDATED : நவ 16, 2023 12:00 AM
ADDED : நவ 16, 2023 10:00 AM
புதிய மருத்துவ கல்லுாரிகளை துவங்குவதற்கும், எம்.பி.பி.எஸ்., படிப்பு இடங்களை அதிகரிப்பதற்கும், தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம். அதற்காக, ஆண்டுதோறும் மருத்துவ கல்லுாரிகள் விண்ணப்பித்து வருகின்றன.இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய நெறிமுறைகளை, என்.எம்.சி., சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சம் 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மட்டுமே, இனிமேல் மருத்துவ கல்லுாரிகள் துவங்க அனுமதி வழங்கப்படும். 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வீதம் ஒதுக்கப்படும்&' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த புதிய நடைமுறை, 2024 - 2025ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையடுத்து தற்போது, எம்.பி.பி.எஸ்., புதிய வழிகாட்டி விதிகள், 2025 - 26ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
