ரயில்வேயில் அப்ரன்டீஸ் முடித்தவர்கள் வேலை கேட்டு குடும்பத்துடன் போராட்டம்
ரயில்வேயில் அப்ரன்டீஸ் முடித்தவர்கள் வேலை கேட்டு குடும்பத்துடன் போராட்டம்
UPDATED : நவ 16, 2023 12:00 AM
ADDED : நவ 16, 2023 10:51 AM
சென்னை:
ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி பயிற்சி முடித்தோர், தங்களது குடும்பத்தினருடன் சென்ட்ரலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எப்., ஆலையில், 2008 முதல் 2023ம் ஆண்டு வரை தொழில் பழகுனர் என்று கூறப்படும் அப்ரண்டீஸ் பயிற்சியை, 17,000 பேர் முடித்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு அளிக்காமல் தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எப்., புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்கள், வேலை வழங்க கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே நேற்று, தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெண்கள், குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து, புதுப்பேட்டையில் உள்ள சமூகநலக்கூடத்துக்கு அழைத்து சென்றனர்.
