எழுத்தறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
எழுத்தறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
UPDATED : நவ 16, 2023 12:00 AM
ADDED : நவ 16, 2023 11:10 AM
மதுரை:
மதுரையில் புதிய பாரத எழுத்தறிவு எண்ணறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் சான்றிதழ் வழங்கப்பட்டது.மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு மார்ச் 19 ல் தேர்வு நடந்தது. 18 ஆயிரத்து 682 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மத்திய அரசு சார்பில் செப்.11 ல் வெளியிடப்பட்டது.இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மேற்கு கல்வி ஒன்றியம் ஊராட்சி தொடக்க பள்ளியில் நடந்தது. 40 பயனாளிகளுக்கு சி.இ.ஓ., கார்த்திகா சான்றிதழ்களை வழங்கினார்.வட்டார கல்வி அலுவலர்கள் ஜான்கென்னடி அலெக்சாண்டர், ஜோஸ்பின் ரூபி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், தலைமையாசிரியை புவனேஸ்வரி பங்கேற்றனர். தேர்வு எழுதிய அனைவருக்கும் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
