UPDATED : நவ 16, 2023 12:00 AM
ADDED : நவ 16, 2023 04:38 PM
அ நிறம் | அளவு
சென்னை:
இந்திய தேசிய பத்திரிகை தினத்தையொட்டி பத்திரிகை, ஊடகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர். இந்திய தேசிய பத்திரிகை தினத்தில் ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம்.அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில் சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
