தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை தேர்வுக்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

அண்ணா பல்கலை தேர்வுக்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

அண்ணா பல்கலை தேர்வுக்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம்


UPDATED : நவ 17, 2023 12:00 AM

ADDED : நவ 17, 2023 05:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2023 12:00 AM ADDED : நவ 17, 2023 05:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மாணவர்கள் உள்ளிட்ட, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பொன்முடி, இந்த செமஸ்டருக்கு கட்டண உயர்வு பொருந்தாது. அடுத்த செமஸ்டருக்கு தான் எனக் கூறியுள்ளார்.அண்ணா பல்கலையில், தேர்வு கட்டணமாக ரூ.150 பெறப்பட்டு வந்தது. இது 50 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு ரூ.600 பெறப்பட்டு வந்த நிலையில் அது ரூ.900 ஆக உயர்ந்துள்ளது.இளநிலை செய்முறை தேர்வுக்கட்டணம் ரூ.450 ஆகவும், முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக் கட்டணம் ரூ.650 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க தேர்வுக்கட்டணம் ரூ.900 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. பல கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
பொதுவாக பல்கலைக்கழகங்களில் அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வுக் கட்டணம் என்பது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என ஏற்கனவே முடிவு எடுத்தோம். ஒரே மாதிரியாக தேர்வுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் அண்ணா பல்கலையில் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மற்ற பல்கலைக்கழகங்களில் தேர்வுக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் குறைவாக இருப்பதால், அதனை உயர்த்துவதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர். இந்த தேர்வுக் கட்டணம் இந்த செமஸ்டருக்கு பொருந்தாது. பழைய கட்டணமே இருக்கும். இவ்வாறு பொன்முடி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us