வயிறு முட்ட உணவு உண்ணாதீங்க திண்டுக்கல் கலெக்டர் அறிவுரை
வயிறு முட்ட உணவு உண்ணாதீங்க திண்டுக்கல் கலெக்டர் அறிவுரை
UPDATED : நவ 18, 2023 12:00 AM
ADDED : நவ 18, 2023 10:16 AM
திண்டுக்கல்:
நோயின்றி வாழ வயிறு முட்ட உணவு உண்ண கூடாது&' என கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடந்த 6வது தேசிய இயற்கை மருத்துவ தின விழாவில் அவர் பேசியதாவது: இயற்கை மருத்துவம் மருந்து, மாத்திரை, பக்கவிளைவு இல்லாததாகும். இம்முறையில் நீரிழிவு, ரத்த அழுத்தம், உள், வெளி மூலம், அல்சர், உடல் பருமன், அஜீரண கோளாறு, மாதவிடாய் கோளாறு, தோல் நோய், நரம்பு தளர்ச்சி, சுவாச கோளாறு, ரத்தசோகை, முடக்கு வாதம், மூட்டு வலிகள் கர்ப்பகால யோகா ஆலோசனைகள் வழங்கப் படுகிறது. இந்த சிகிச்சைக்கு இயற்கை உணவுகள் மட்டுமே உண்ண வேண்டும்.புளிப்பு, காரம் அதிகளவில் பயன்படுத்த கூடாது, வயிறு முட்ட உணவு உண்ண கூடாது. காலையில் சூடாக எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. குறைந்தது 7முதல் 8 மணி நேரம் துாக்கம் அவசியும், என்றார்.மேயர் இளமதி, அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநர் பூமிநாதன், மாவட்டசித்தா மருத்துவ அலுவலர் அமுதா, யோகா, இயற்கை மருத்துவ அலுவலர்கள் தேவராஜா, மகாமுனி, மருத்துவகண்காணிப்பாளர் வீரமணி, தலைமை மருத்துவர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி பங்கேற்றனர்.
