தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டி.ஆர்.பி., தேர்வுக்கு இலவச வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டி.ஆர்.பி., தேர்வுக்கு இலவச வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டி.ஆர்.பி., தேர்வுக்கு இலவச வகுப்பு


UPDATED : நவ 18, 2023 12:00 AM

ADDED : நவ 18, 2023 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2023 12:00 AM ADDED : நவ 18, 2023 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
டி.ஆர்.பி., தேர்வுக்கான அறிமுக வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நேற்று நடந்தது.தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 2,222 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒரு பட்ட படிப்புடன், பி.எட்., மற்றும் டி.என்.டி.இ.டி., பேப்பர், 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள், www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இத்தேர்விற்கு விண்ணப்பிக்க, வரும், 30 கடைசி நாள். இத்தேர்விற்கான இலவச அறிமுக வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்து பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.அப்போது, தேர்வுக்கு படிக்க வேண்டிய விதம், தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என விளக்கப்பட்டது. மேலும், தேர்வர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்வுக்கு தயாராகும், 15 தேர்வர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us