10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு
10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு
UPDATED : நவ 18, 2023 12:00 AM
ADDED : நவ 18, 2023 03:50 PM
சென்னை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், அடுத்த ஆண்டு மார்ச் 1ல் துவங்கி, ஏப்., 8ல் முடிகின்றன. மே 14ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான கால அட்டவணையை, துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். பள்ளிக் கல்வி துறை இயக்குனர் அறிவொளி, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா, தனியார் பள்ளிகள் துறை இயக்குனர் நாகராஜ முருகன், இணை இயக்குனர்கள் நரேஷ், செல்வகுமார், கோபிதாஸ் பங்கேற்றனர்.பாடவாரியாக பொது தேர்வுக்கு முந்தைய செய்முறை தேர்வுகள், &'தியரி&' என்ற கருத்தியல் பொது தேர்வுகள் நடக்கும் தேதிகளும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என, மூன்று வகுப்புகளின் மாணவர்களுக்கும், காலை 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, மதியம் 1:15 மணிக்கு முடிகிறது.காலை 10:00 முதல் 10:10 வரை, வினாத்தாள் வாசித்து பார்க்கும் நேரம். காலை 10:10 மணி முதல் 10:15 மணி வரை, மாணவர்களின் விபரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கும் நேரம். காலை 10:15 மணி முதல் மதியம் 1:15 மணி வரை, விடைகளை எழுத வேண்டிய நேரம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
