92 உதவி பேராசிரியர்கள் இடமாற்றம்: அண்ணாமலை பல்கலையில் பரபரப்பு
92 உதவி பேராசிரியர்கள் இடமாற்றம்: அண்ணாமலை பல்கலையில் பரபரப்பு
UPDATED : நவ 18, 2023 12:00 AM
ADDED : நவ 18, 2023 03:58 PM
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறையில் பி.எஸ்சி., விவசாய பட்டப்படிப்பில் 240 மாணவர்கள், பி.எஸ்சி., தோட்டக்கலை பட்ட படிப்பில் 60 மாணவர்கள் என, மொத்தம் 300 பேர் படிக்கின்றனர். வேளாண் துறையில் 230க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் பணி புரிகின்றனர்.இந்நிலையில் தேவைக்கு அதிகமாக உள்ள உதவி பேராசிரியர்களை வேறு வேளாண் கல்லுாரிகளுக்கு மாற்றிட உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லுாரியில் பணிபுரிந்த உதவி பேராசிரியர்களில் 92 பேர், முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள வேளாண் கல்லுாரிகள், வேளாண் ஆராய்ச்சி மையம், வேளாண் அறிவியல் மையம் ஆகிய இடங்களுக்கு அதிரடியாக மாற்றம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம், அதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு அனுப்பி உள்ளது.மீதமுள்ள பேராசிரியர்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதவி பேராசிரியர்கள் 92 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
