புத்தகம் படியுங்க: அறிவுரை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
புத்தகம் படியுங்க: அறிவுரை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
UPDATED : நவ 18, 2023 12:00 AM
ADDED : நவ 18, 2023 05:36 PM
அ நிறம் | அளவு
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய 56வது தேசிய நூலக வார விழாவில், பள்ளி மாணவர்கள் அமைத்திருந்த திருக்குறள் விளக்கக் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்துப் பார்வையிட்டார்.இதையடுத்து, புத்தகத்தைப் புரட்டிப் புரட்டி படிக்கும்போது, ஏதாவது ஒரு பக்கத்தில் இருக்கின்ற இரண்டு வரிகள்தான் மிகப்பெரிய மாற்றத்தை தரக்கூடியதாக இருக்கும் என மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை வழங்கினார்.
