UPDATED : நவ 19, 2023 12:00 AM
ADDED : நவ 19, 2023 10:53 AM
கோவை:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாரதியார் பல்கலையில் முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற கூட்டம், பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் தலைமையில், பல்கலை அரங்கில் நடந்தது.இதில், நான் முதல்வன் திட்ட தற்போதைய செயல்பாடுகள், மாணவர்கள் புரிதல் திறன், இத்திட்ட செயல்பாடுகளில் மாணவர்களின் வருகை பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பேசப்பட்டது. பல்கலையில் இத்திட்டத்திற்காக புதிய செல் ஒன்று உருவாக்கவும், இதில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கவும், முதல்வர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.கூட்டத்தில், துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர், சிண்டிகேட் உறுப்பினர் சரவணக்குமார், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் தீபக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
