தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நகர தி.மு.க., இளைஞரணி நீட் விலக்கு கடிதம் சேகரிப்பு

நகர தி.மு.க., இளைஞரணி நீட் விலக்கு கடிதம் சேகரிப்பு

நகர தி.மு.க., இளைஞரணி நீட் விலக்கு கடிதம் சேகரிப்பு


UPDATED : நவ 19, 2023 12:00 AM

ADDED : நவ 19, 2023 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2023 12:00 AM ADDED : நவ 19, 2023 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் நீட் விலக்கு கோரி மாணவர்கள், பொதுமக்களிடம் கையெழுத்திட்ட கடிதம் சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி நகர தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகங்கள் எதிரிலும், பஸ் நிலையத்திலும் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் நைனாமுகமது தலைமை தாங்கினார்.பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நகர தலைவர் தண்டபாணி, பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு முன்னிலை வகித்தனர். மாணவரணி அமைப்பாளர் யுவராஜ் வரவேற்றார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வகுமார், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நீட் விலக்கு கோரிய கையொப்பமிட்ட கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப சேகரித்தார்.நகர துணைச் செயலாளர் பிரசாந்த், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி, தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ஹரிஹரன், பேரூராட்சி கவுன்சிலர் சுபா சிவஞானம், கலை இலக்கிய அணி கலைச்செல்வன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us