பிரெஞ்சு வேலை வாய்ப்பு முகாம் பட்டதாரிகள் ஆர்வமாக பங்கேற்பு
பிரெஞ்சு வேலை வாய்ப்பு முகாம் பட்டதாரிகள் ஆர்வமாக பங்கேற்பு
UPDATED : நவ 19, 2023 12:00 AM
ADDED : நவ 19, 2023 04:42 PM
புதுச்சேரி:
இ.சி.ஆர்., நவீன மீன் அங்காடியில் நடந்த பிரெஞ்சு வேலைவாய்ப்பு முகாமில், பட்டதாரிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் சார்பில், இ.சி.ஆர்., நவீன மீன் அங்காடி வளாகத்தில் நகர வாழ்வாதார மையத்தில் பிரெஞ்சு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் முகாமை துவக்கி வைத்து பேசினார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.நேர்காணலில் முதல்கட்டமாக 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மைய உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் கலந்து கொண்டார். நேற்றைய பிரெஞ்சு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க தவறியவர்கள் 9843442999 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.
