தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் கல்விக் கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் கல்விக் கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் கல்விக் கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 20, 2023 12:00 AM

ADDED : நவ 20, 2023 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2023 12:00 AM ADDED : நவ 20, 2023 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
மாணவ, மாணவியர் கல்விக்கடன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழங்க ஒருங்கிணைக்கும் பணி சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து, நாளை (20ம் தேதி) காலை 9:00 மணியளவில் கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்லுாரிக்கும் அக்கல்லுாரியின் முதல்வர் கல்விக்கடன் வழங்குதல் தொடர்பான கண்காணிப்பு அலுவலராக செயல்படுவார். கல்வி கடன் கோரும் மாணவ மாணவியர் http://www.vidyalakshmi என்ற இணையவழி மூலமாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.மேற்படி முகாம்களில் ஜாதிச்சான்று, வருமானச் சான்று தேவைப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இணையவழியில் உடனடியாக வழங்க ஏதுவாக மேலாளர், மாவட்ட மின் ஆளுமை மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து ஸ்டால் அமைக்க மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us