தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறமையை பயன்படுத்தி முன்னுக்கு வர மருத்துவ மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

திறமையை பயன்படுத்தி முன்னுக்கு வர மருத்துவ மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

திறமையை பயன்படுத்தி முன்னுக்கு வர மருத்துவ மாணவர்களுக்கு அறிவுறுத்தல்


UPDATED : நவ 20, 2023 12:00 AM

ADDED : நவ 20, 2023 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2023 12:00 AM ADDED : நவ 20, 2023 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:
ஓசூர், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2023 - 24 ம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, வெள்ளை கோட் வழங்கும் விழா, கல்லுாரி ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.கல்லுாரி நிறுவனரும், எம்.பி.,யுமான தம்பிதுரை தலைமை வகித்து, மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை கோட் மற்றும் படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பேசுகையில், ஒரு விளக்கை ஏற்றி வைக்கிறோம் என்றால், அந்த விளக்கின் சுடர் மேல்நோக்கி தான் எரியும். அதேபோல், ஒவ்வொரு மாணவரும் திறமை, ஆற்றல் எல்லாவற்றையும் பயன்படுத்தி முன்னுக்கு வர வேண்டும், என்றார்.முன்னதாக, மனநல மருத்துவர் கண்ணன் கிரிஸ், மாணவ, மாணவியருக்கு ஆலோசனைகளை வழங்கினார். செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி அறங்காவலர் டாக்டர் பானுமதி தம்பிதுரை, செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை, டாக்டர் நம்ரதா தம்பிதுரை, டீன் சோமசேகர், மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா, துணை முதல்வர் ஆனந்தரெட்டி, மருத்துவ கல்லுாரி இருப்பிட மருத்துவர் பார்வதி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், ராஜேந்திரன், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ரங்கநாத், வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளி குழும அறங்காவலர் கூத்தரசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us